மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 53 ஆயிரம் கோடியில், இன்று 2 ஆயிரத்து 500 கோடியை செலுத்துவதாக வோடஃபோன்-ஐடியா (Vodafone Idea) தொலைத் தொடர்பு நிறுவனம் கூறியதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
தொலைத் தொடர்பு சேவைக்கான உரிமம், அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையை உடனே செலுத்தாவிட்டால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது.
இதை அடுத்து இன்று 2 ஆயிரத்து 500 கோடியும், வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆயிரம் கோடி ரூபாயும் செலுத்துவதாக வோடஃபோன்-ஐடியா வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்ததுடன், நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க க்கூடாது என்ற கோரிக்கையையும் ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது.