கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணியை, பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் முதலுதவி அளித்து காப்பாற்றினர்.
கொல்காத்தாவிலிருந்து பாக்தோக்ரா (Bagdogra) செல்வதற்காக விமான நிலையம் வந்த ராய் சவுத்ரி என்ற பயணி, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்தா போஸ் என்பவர், மயங்கி விழுந்த பயணியை சோதித்து பார்த்ததில் மூச்சு நிலையாக இல்லாதததை அறிந்து, மற்றொரு வீரரின் உதவியுடன் முதலுதவி அளித்துள்ளார்.
இதையடுத்து மயங்கி கிடந்த பயணி சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். விரைந்து செயல்பட்டு முதலுதவி அளித்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.