டெல்லியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகியோர் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றவர்கள் மீது, பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புல் பிரகலாத்பூர் பகுதியில் அதிகாலை 5 மணியளவில், நடத்தப்பட்ட இந்த என்கவுண்டரில் 30 முறை சுடப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் மட்டுமின்றி, சமீபத்தில் கரவால் நகரில் நடந்த கொலையிலும் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.