பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு இருக்கை கடவுள் சிவனுக்கான சிறு கோவிலாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள ஓம்கரேஷ்வர், மகாகலேஷ்வர் மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் அந்த ரயிலின் பி5 பெட்டியில் 64வது சீட், சிவபெருமானின் சிறு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. கடவுள் படங்களை ஒட்டி மாலையணிவித்து ரயில் ஊழியர்கள் வழிபாடு நடத்தினர். சிவபெருமானுக்காக இந்த சீட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் சிறப்பு பூஜை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.