டெலிகாம் நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் அளித்தால் வங்கிகள் தான் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, எஸ்பிஐ வங்கி சேர்மன் ரஜ்னீஷ் குமார் (Rajnish Kumar) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், டெலிகாம் நிறுவனங்கள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு தொலைதொடர்புதுறையிடம் தான் உள்ளது. அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் கூறினார்.
மேலும், எதாவது ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டால், அதோடு தொடர்பு கொண்ட வங்கிகள், ஊழியர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் என ஒரு பெரும் சுற்றுச்சூழல் அமைப்பே பாதிக்கப்படுகிறது, மேலும் அந்த சமயங்களில் வங்கிகள் தான் அதற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும் எனவும் ரஜ்னீஷ் குமார் குறிப்பிட்டார்.