இரண்டு உலகப் போர்கள் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அகமதாபாதில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மூன்றாம் உலக யுத்தம் வேறு வடிவில் உருவெடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எங்கெங்கு நோக்கினும் வன்முறை , எதிர்ப்புணர்வு காணப்படுகிறது என்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
யாருமே மகிழ்ச்சியாக இல்லை. அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே அதிருப்தியுடன் மகிழ்ச்சியற்று காணப்படுகிறார்கள் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.