டெல்லி ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் பன்னாட்டு விமான நிலையம் போன்று 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான மாதிரி வரை படத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் டெல்லி ரயில் நிலையத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ள வடக்கு ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம், அதற்கான ஏலத்தை சில மாதங்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் வருவதற்கும் செல்வதற்கும் தனித் தனி நுழைவு வாயில், மேம்பால அணுகல் சாலைகள் என டெல்லி ரயில் நிலையத்தை மெருகேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதன் கட்டுமானப் பணிகள் முடிய 4 ஆண்டுகள் ஆகும் என்றும் ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.