ஏடிஎம்களில் எடுக்கும் பணத்துக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் இன்டர்சேஞ்ச் பீஸ் எனப்படும் பரிமாற்ற கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு இந்திய ஏடிஎம் ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
மாதத்துக்கு 5 முறை வரை வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் பணம் எடுக்கவும், அதன்பிறகு ஒவ்வொரு முறையும் எடுக்கும் பணத்துக்கு தலா 15 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கட்டணம் நிர்ணயித்துள்ளது.
ஆனால் இந்த தொகை போதாது, இதனால் தங்களது தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கிக்கு இந்திய ஏடிஎம் ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg