மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து ஏர் இந்திய விமானம் புறப்படும்போது ஜீப் ஒன்று ஓடுபாதையில் குறுக்கிட்டதால் ஏற்பட இருந்த பெரும் விபத்து விமானியின் சாதூர்யத்தால் தவிர்க்கப்பட்டது.
காலை 7.55 மணிக்கு புனேவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம், மணிக்கு 222 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஓடுபாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது ஜீப் ஒன்று ஓடுபாதையின் குறுக்கே வந்தது. இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட விமானி உடனடியாக விமானத்தின் முன் சக்கரத்தை உயர்த்தி பறக்க வைத்ததால் ஜீப் மீது மோதுவது தவிர்க்கப்பட்டது.
திடீரென மேலே எழும்பியதால் விமானத்தின் வால் பகுதி சேதமடைந்தபோதும் விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg