அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகைக்கு ஒரு வாரகாலமே உள்ள நிலையில், இந்தியாவை வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கியுள்ளதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
வரும் 24ம் தேதி 2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும், நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட 24 நாடுகளை வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழு, வளர்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்தது.
உலக வர்த்தக நிறுவனம், வளரும் நாடுகளுக்கு வழங்கும் மானியங்களை தடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தியா வரும் டிரம்ப் இனிப்புக்கு பதிலாக பாகற்காய்களை கொண்டு வருவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg