மும்பை உயர்நீதிமன்றத்தின் மிகமூத்த நீதிபதி சத்யரஞ்சன் தர்மாதிகாரி (Satyaranjan C Dharmadhikari) ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில், தஹில் ரமாணியை தொடர்ந்து, ராஜினாமா செய்துள்ள 2ஆவது உயர்நீதிமன்ற நீதிபதி இவர். 16 ஆண்டுகளாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய சத்யரஞ்சன் தர்மாதிகாரியை, மத்தியப் பிரதேசம், சென்னை, ஜார்க்கண்ட், ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டது.
ஆனால், வேறு மாநிலங்களுக்கு செல்ல விரும்பாததால் இந்த வாய்ப்புகளை சத்யரஞ்சன் தர்மாதிகாரி மறுத்துவிட்டார். இந்நிலையில், சத்யரஞ்சன் தர்மாதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடும்பத்தினர் நலன் கருதி மகாராஷ்டிராவிலேயே வாழ விரும்புவதாகவும், இந்த அடிப்படையில் முற்றிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் சத்யரஞ்சன் தர்மாதிகாரி தெரிவித்துள்ளார்.