கொல்கத்தாவில் நடைபெற்ற மெட்ரோ வழித்தட தொடக்க விழாவுக்கு அழைக்கப்படாதது வருத்தத்தை அளித்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் கிழக்கு, மேற்கு பகுதியை இணைக்கும் வகையிலான மெட்ரோ திட்டத்தில் முதல்கட்ட பணி முடிவடைந்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா அழைக்கப்படவில்லை. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய மம்தா, ரயில்வே அமைச்சராக முன்பு பதவிவகித்த காலத்தில் அந்த திட்டத்துக்காக தாம் மிகவும் கடினமாக பணியாற்றியதாகவும், கண்ணீர் சிந்தியே அத்திட்ட ஒப்புதலை பெற்றதாகவும் குறிப்பிட்டார். அப்படியிருக்கையில் விழாவுக்கு ஒப்புக்கு கூட தம்மை பாஜகவினர் அழைக்காதது வருத்தத்தை தந்ததாக மம்தா கூறினார்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg