ராம பிரான் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரெயிலின் தொடக்க விழாவை அடுத்த மாத இறுதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
ராமபிரான் தொடர்புடைய தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏற்கனவே ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது இந்நிலையில் ராமாயணம் தொடர்புடைய படங்கள், பாடல்கள் உள்ளிட்ட கருப்பொருட்கள் அடங்கிய உட்புறம், பின்னணி பஜனை இசை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய ரெயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலும் ராம பிரானுடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பயண அட்டவணை விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் வி.கே.யாதவ் தெரிவித்தார். ஹோலி பண்டிகைக்குப்பின் ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
watch more on : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg