மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31க்குப் பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
மார்ச் 31ம் தேதிக்குப் பின் ஆதாரை பான்கார்டுடன் இணைத்தால் மீண்டும் பான் கார்டு எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. மேலும் 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட உள்ளன.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg