குஜராத் மாநிலம் பூஞ்ச் பகுதியில் 68 மாணவிகளை ஆடைகளை களைய வைத்து சோதனையிட்டதாக விடுதி வார்டன் ,ஆசிரியை மற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். கல்லூரியின் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி வருகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக ஒதுக்குவதும் அவர்களுக்கு தனியாக சமைப்பதும் இங்கு வழக்கம். இதில் 68 மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிலுக்கும், சமையலறைக்கும் சென்றதாகக் கூறி, விடுதி முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் பெண் ஊழியர்கள் மாணவிகளின் ஆடைகளை களைய வைத்து சோதனையிட்டனர்.
இதுகுறித்த புகாரையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே இந்த வழக்கை முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. போலீசார் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg