செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நிலுவைத் தொகையை செலுத்தாததால் தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய உச்சநீதிமன்றம்

Feb 15, 2020 06:36:48 AM

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருப்பதா என தொலைத்தொடர்பு நிறுவனங்களை நீதிபதிகள் சாடியுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அடிப்படையான சேவைகள் மூலம் ஈட்டும் வருவாயை மட்டும் கணக்கிட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உரிம கட்டணம் செலுத்தி வந்தன.

செல்போன் விற்பனை, டிவிடென்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டுவந்த புதிய வருவாய் பங்கீட்டு முறை. இந்த கணக்கின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மனு தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதன் பிறகும், புதிய வருவாய்ப் பங்கீட்டு முறைப்படி நிலுவைத் தொகையை செலுத்தாத தொலைத்தொடர்பு நிறுவனங்களை, உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்த பிறகும் ஒரு பைசா கூட செலுத்தப்படவில்லை என்பதை குறிப்பிட்ட நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர், எம்ஆர் ஷா அமர்வு , தாங்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், இந்த நீதிமன்றத்தில் பணியாற்றக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டது. ஒரு பைசா கூட செலுத்தப்படவில்லை எனில், இது பணபலத்தின் விளைவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறுத்திவைத்த மத்திய அரசின் அதிகாரி யார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு அதிகாரி தன்னைத்தானே நீதிபதி என நினைத்துக் கொண்டு உத்தரவை நிறுத்திவைத்தால், இந்த நாட்டில் சட்டம் ஏதாவது எஞ்சியுள்ளதா என்று கேட்டனர்.

நாட்டில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் தங்கள் மனச்சாட்சியை உலுக்கிவிட்டது என மிகக் கடுமையாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிவீனத்தை உருவாக்குவது யார் என தெரியவில்லை, இந்த நாட்டில் வாழ்வதைவிட வேறு எங்காவது சென்று விடலாம் என கூறினர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைத்த, மத்திய அரசு அதிகாரி தனது உத்தரவை திரும்பப் பெறவில்லை எனில் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தனர். யார் அந்த அதிகாரி, அவர் எங்கிருக்கிறார், அவரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துங்கள் எனவும் ஆவேசத்துடன் நீதிபதிகள் கூறினர்.

ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், டாடா டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள்
மார்ச் 17ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த தேதிக்குள் உரிய தொகையை செலுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினர்.

இதையடுத்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்று வரும் 20-ம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்தநிலையில், டெலிகாம் நிறுவனங்களின் நிலுவைத்தொகையை நள்ளிரவு பதினொன்று 59-க்குள் செலுத்த, தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது..


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement