நிர்பயா வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதி ஆர். பானுமதி மயங்கி விழுந்தார்.
நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தனித்தனியாக சட்ட உபாயங்களை பயன்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி, அவர்களை தனித்தனி நாள்களில் தூக்கிலிட அனுமதிகோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை விசாரித்து கொண்டிருந்த பெண் நீதிபதி பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை பிற நீதிபதிகளும், உச்சநீதிமன்ற ஊழியர்களும் மயக்கம் தெளியச் செய்தனர்.
பின்னர் வீல்சேரில் மருத்துவ சிகிச்சைக்காக பானுமதி அழைத்து செல்லப்பட்டார். நீதிபதி பானுமதி மயங்கி விழுந்ததால், மனு மீதான விசாரணை மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.