அதிபர் டிரம்பின் இந்திய பயணத்தின் போது அமெரிக்காவில் இருந்து சிக்கன் மற்றும் பால்பொருட்கள் இறக்குமதியை அனுமதிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளரான இந்தியா, சுமார் எட்டு கோடி பால் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், பால்பொருள் இறக்குமதியை அனுமதிப்பதில்லை.
கடந்த ஆண்டு, மத்திய அரசு, இருதய நோய்க்கான Stents, செயற்கை மூட்டு உள்ளிட்ட அமெரிக்க இறக்குமதிக்கான விலைக்கட்டுப்பாட்டை அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவுக்கான சிறப்பு வர்தக அந்தஸ்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.
இந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி இந்தியா வரும் அவர், இரு நாட்டு வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான சில சலுகைகளை அறிவிப்பதுடன், இந்தியாவுக்கு மீண்டும் சிறப்பு வர்த்தக அந்தஸ்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து பதப்படுத்தப்பட்ட சிக்கன், பால்பொருள்கள் ஆகியவற்றை குறைந்த வரிகளுடன் இறக்குமதி செய்ய அனுமதிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.