கேரளாவில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை13 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன.
இதையடுத்து குடிநீர் பாட்டில்களின் விலையைக் குறைப்பது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திலோத்தமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது பலனளிக்காத நிலையில், குடிநீர் பாட்டிலை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் கொண்டு வந்த கேரள அரசு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை 13 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இந்திய தரச்சான்று நிறுவனம் அங்கீகரித்த குடிநீர் பாட்டில்களை மட்டும்தான் விற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.