ஜம்மு காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பி விட்டதாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த மாதம் அங்கு சென்ற 15 பேர் கொண்ட வெளிநாட்டு தூதர்கள் குழு பார்வையிட்டது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்கள் கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
அவர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர். பின்னர் அந்தக் குழு ஜம்மு பகுதியையும் பார்வையிட்டது. நேற்று மாலை டெல்லி திரும்பிய தூதர்கள், காஷ்மீரில் தற்போதைய நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். காஷ்மீரில் அதிகாரிகள், ராணுவத்தினரை சந்தித்ததாகவும் தற்போது கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டதாக பெரும்பாலான தூதர்கள் பதிலளித்தனர்.