பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், தேரி எனப்படும் எரிசக்தி வளங்கள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவருமான விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி காலமானார்.
அவருக்கு வயது 79. இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலநிலை மாற்றம் குறித்து கருத்துக்களைத் தெரிவித்திருந்த பச்சோரியின் அமைப்பு, அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் ஆகியோருக்கு 2007ல் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பச்சோரி பெற்றுள்ளார்.கடந்த 2015 ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றும் சக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பச்சோரி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் டெரியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் மீண்டும் அவருக்கு டெரியின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.