கர்நாடக மாநிலம் மங்களூரில் விமானத்தை ஓடுதளத்தில் சரியாக தரையிறக்காத விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 31ந் தேதி துபாயில் இருந்து புறப்பட்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மங்களூர் விமான நிலையத்திற்கு வந்தது. ஓடுதளத்தில் மிகவும் அபாயகரமான முறையில் விமானம் தரையிறங்கியதால் ஓடுதளத்தில் இருந்த மூன்று தரையிறக்க வழிகாட்டி விளக்குகள் சேதமடைந்தன.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட விமான போக்குவரத்து இயக்குனரகம், விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விமானத்தை தரையிறக்கியதால் நான்கரை மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.