மும்பையில் டப்பாவாலாக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு உணவு கொண்டு செல்பவர்கள் டப்பாவாலாக்கள் என அழைக்கப்படுகின்றனர். உலகப்புகழ் பெற்ற இவர்கள் தங்களுக்கு வீடுகள் கட்டித் தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் டப்பாவாலாக்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்துள்ள மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் டப்பாவாலா பவன் என்ற குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று உறுதியளித்துள்ளார். அஜித் பவாரின் இந்த அறிவிப்புக்கு டப்பாவாலாக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் நன்றியையும் நவின்றுள்ளனர்.