செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கிரிமினல் வேட்பாளர்கள் ஏன்..? அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!

Feb 14, 2020 06:25:45 AM

குதியான நல்ல வேட்பாளர்கள் இருந்தாலும், குற்றப்பின்னணி உள்ள நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை வெளியிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தொடர் அறிவுறுத்தலை மதிக்காமல், கிரிமினல் நபர்களுக்கு, அரசியல் கட்சிகள் தேர்தல் வாய்ப்புகளை வழங்குவதை தடுக்க, தேர்தல் ஆணையமும், அரசும் தவறிவிட்டதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ரவீந்திர பட் அமர்வு இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

இனிமேல்,  சட்டப்பேரவை மற்றும் பொதுத் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து, இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் அரசியல் கட்சிகள் தகவல் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள், ஒரு உள்ளூர் நாளிதழ். ஒரு தேசிய நாளிதழ், முகநூல், டுவிட்டர் ஆகியவற்றில், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம், அது தொடர்பாக குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்ற அறிக்கையை 72மணி நேரத்திற்குள் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் . இதை மீறும் அரசியல் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

குற்றப்பின்னணி இருந்தாலும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது போன்ற காரணங்களை தவிர்த்து விட்டு கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான இதர காரணங்களை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

கிரிமினல் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் முன்பு அறிவுறுத்தினாலும், அது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

ஆனால் இதற்கான விதிமுறை மாற்றங்களை கொண்டுவர தேர்தல் ஆணையம் தவறியதால், அரசியல் கட்சிகள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றி விட்டதாக பாஜக வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யாயா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த நிலையில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்துள்ளது.


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement