பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் இருந்து ஆளில்லா சிறு விமானங்கள் மூலம் போதைப்பொருள்களும் ஆயுதங்களும் போடப்படுவதைத் தடுக்க உதவுமாறு, ராணுவத்திற்கு பஞ்சாப் மாநில காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமிர்தசரஸ் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் சுமார் 40 தடவை ஆளில்லா விமானங்கள் வாயிலாக பாகிஸ்தான் விஷமிகள் போதைப் பொட்டலங்களையும்,ஆயுதங்களையும் போட்டுள்ளனர்.
இதை தடுக்க ஆன்டி டிரோன் டெக்னாலஜி ((anti-drone technology)) தேவைப்படுவதால், ராணுவம், விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளோடு பேசி வருவதாக பஞ்சாப் காவல்துறை தலைவர் திங்கர் குப்தா ((Dinkar Gupta)) தெரிவித்துள்ளார்.
2019 ஆகஸ்ட் முதல் இதைப் போன்ற எட்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டு 41 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கிகள், 4 ஆளில்லா விமானங்கள், கள்ள நோட்டுகள், ஆயிரத்து 100 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.