செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை - மைசூரு இடையே அதிவிரைவு ரயில் மார்க்கம்

Feb 13, 2020 04:18:54 PM

சென்னை - மைசூரு இடையே மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடைய அதிவேக ரயில் மார்க்கம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யவும் வரைவு வடிவமைப்பை உருவாக்கவுமான டெண்டர் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

சென்னை - பெங்களூரு - மைசூரு இடையிலான 435 கிலோமீட்டர் தூரத்தை சதாப்தி ரயில்கள் 7 முதல் ஏழரை மணி நேரத்தில் கடக்கின்றன. இந்நிலையில் இந்த மார்க்கத்தில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் பாதியாகக் குறையும் என்பதால், தேசிய அதிவிரைவு ரயில் கழகம்  நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக சில உயர்மட்ட மற்றும் நிலத்தடிக் கட்டமைப்புகளுடன் கூடிய ரயில்வே மார்க்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதியாக இந்த மார்க்கம் குறைந்தபட்ச வளைவுகள் மற்றும் சரிவுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டரில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் ரயில்வே மார்க்கத்துக்கு திட்டமிடப்படும் இடங்களை, லேசர் ஒளிக்கற்றை மற்றும் சென்சார்கள் மூலம் ஆய்வு செய்யும் லிடார் ((Lidar)) எனப்படும் முறை மூலம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, முதல் கட்ட மார்க்கத்துக்கான வரைவு வடிவமைப்பை உருவாக்கும்.

இதன் அடிப்படையில் காடுகள், சமவெளிகள், ஆறுகளை உள்ளடக்கிய வழித்தடங்கள், கட்ட வேண்டிய பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் கூடிய வரைபடம் உருவாக்கப்படும்.

இந்த ரயில்வே மார்க்கம் முக்கிய நகரங்கள், வணிக மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் வகையில், அதிவிரைவுச் சாலைகளை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவிரைவு ரயில்வே மார்க்கம் வேலிகளுடன் கூடிய இருவழி மார்க்கங்களை உள்ளடக்கி 50 முதல் 60 மீட்டர் அகலத்துக்கு திட்டமிடப்படுவதால் பல லட்சம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement