கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வினய் சர்மாவின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வினய் மனு தாக்கல் செய்திருந்தான்.
குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை அளித்து வருகின்றனர். இதனால் ஒத்தி வைக்கப்பட்ட அவர்களின் தூக்குத் தண்டனைக்கு புதிய தேதியை நிர்ணயிப்பதில் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிர்பயாவுக்கு நீதி கிடைக்க தாமதமாவதை அறிந்து அவருடைய தாயார் ஆஷாதேவி நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார்.