டெல்லி தேர்தலில் கிடைத்த வெற்றியை ஆம் ஆத்மி தொண்டர்கள் கட்சி தலைமையகத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடதற்கு கெஜரிவாலே காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதை அக்கட்சித் தொண்டர்கள், டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி தலைமையகத்தில் இனிப்புகளை வழங்கியும், ஆடி பாடியும் கொண்டாடினர்.
பட்டாசுகள் எதையும் அவர்கள் கொண்டாட்டத்தின்போது வெடிக்கவில்லை. இதற்கு, பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என கட்சியினருக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்ததே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.