கடந்த ஆண்டு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 3 ஆயிரத்து 479 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்களும் 2 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்வதற்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புவதற்கும் பாகிஸ்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வரும் அதே நேரத்தில், தாக்குதல்களை நிறுத்துவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.