இந்தியா, இங்கிலாந்து நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி வரும் 13ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது.
அஜேயா வாரியர் என்ற பெயரில் தொடங்க உள்ள இந்தப் பயிற்சி இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பெரி சமவெளியில் நடக்க உள்ளது. இந்தப் பயிற்சியில் இரு நாடுகளைச் சேர்ந்த 120 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது நகர்ப்புறங்களில் தீவிரவாத தாக்குதல்களைச் சமாளிப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும் நவீன ஆயுதங்களை கையாளுதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படுவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.