ஆந்திராவில் விவசாயத்திற்காக போடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பால் போல் வெண்மையாக தண்ணீர் வந்ததை அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கர்னூல் மாவட்டம் கிரந்திவேமுலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சிவா ரெட்டி எனும் விவசாயி. தன்னுடைய விவசாய நிலத்தில் வெங்கட சிவா ரெட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் விவசாய தேவைக்கு தண்ணீரை பாய்ச்சி வந்தார்.
இந்நிலையில், வயலுக்கு சென்ற வெங்கட சிவா ரெட்டி, வழக்கம்போல் நீர் இறைப்பதற்காக மின்மோட்டாரை போட்டுள்ளார். அப்போது போரிலிருந்து பால்போல் வெண்மையான தண்ணீர் வந்துள்ளது.
தகவலறிந்து வந்த விவசாயத்துறை அதிகாரிகள் வெங்கட சிவா ரெட்டியின் போரிலிருந்து வெளியான தண்ணீரின் மாதிரிகளை பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.