மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 3 கோடி ரூபாய் செலவில் வெள்ளி ரதம் செய்யப்பட்டு ஆலய பிரகாரத்தில் வெள்ளோட்டம் நடைபெற்றது.
தருமபுரி ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு அபிராமி அம்மன் வெள்ளித் தேரோட்ட வீதி உலா நடைபெற்றது.