திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.
முதல் நாள் இரவு உற்சவத்தில், விநாயகர், முருகன், அண்ணாமலையார் உடனாகிய உன்னாமுலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், வெள்ளி அதிகார நந்தி மற்றும் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
4 மாட வீதிகளில் வலம் வந்த பஞ்ச மூர்த்திகளை ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் வழிபட்டனர்.