திருப்பதி கோயிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படுவதாக வெளியான செய்தி தவறு என தெரிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், அதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன் சர்க்கரை இல்லாத லட்டு வழங்கப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதுகுறித்த அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம், வழக்கமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மட்டுமே விநியோகிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளது.