சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
தியாகராஜ சுவாமி சன்னதிக்கு எதிப்புறம் உள்ள 54 அடி உயரமுள்ள கொடிமரத்திற்கு வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்த பின்னர், கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது.