ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.