ஹஜ் சடங்குகளில் ஒன்றான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் கொரோனா கட்டுப்பாடுகளால் வழக்கத்தை விட குறைவான யாத்திரிகர்களே கலந்து கொண்டனர்.
மெக்கா அருகே உள்ள மினாவில் ஆண்களும், பெண்களும் தனிநபர் இடைவெளி கடைபிடித்து சாத்தானை குறிக்கும் தூண்கள் மீது சிறிய கற்களை வீசினர்.
ஆண்டுக்கு 30 லட்சம் பேர் ஹஜ் புனிதயாத்திரை மேற்கொண்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் இந்தாண்டு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60,000 பேருக்கு மட்டுமே குலுக்கல் முறையில் சவுதி அரசு அனுமதி வழங்கியது.