நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, எட்டு கால யாகசாலை பூஜைகள் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. 8-வது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கொரோனா காரணமாக உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே குடமுழுக்கு விழாவை கண்டுகளிக்க யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.