மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் என்றழைக்கப்படும் வைரக் கிரீடம் சூட்டப்பட்டு, கையில் செங்கோல் வழங்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடைபெற உள்ளது.