சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மாத பூஜையின் தொடர்ச்சியாக ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
28- ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆராட்டு விழாவும் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.