மகாசிவராத்திரியையொட்டி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருநாகேஸ்வரம் ராகு தலமாகிய நாகநாத சுவாமி கோவிலில் ஆயிரத்து எட்டு வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பட்டு வஸ்திரம், வண்ண மலர் அலங்காரத்தில் காட்சியளித்த நாகநாத சுவாமிகள் முன்பு ஆயிரத்து 8 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு, தேவாரப் பதிகங்களை கொண்டு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சிவாலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள இராகு பகவானுக்கும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.