சென்னையில் 7 கோடி ரூபாய் செலவில் பத்மாவதி தாயார் ஆலயம் கட்டப்பட உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, திருச்சானூரில் உள்ளதை போல்வே சென்னையில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட உள்ளதாகவும், இதற்கான பூமி பூஜை, வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
பழம் பெரும் நடிகை காஞ்சானா தானமாக கொடுத்த நிலத்தில் கட்டப்படும் கோவிலின் கட்டுமான பணிகள் 15 மாதங்களில் நிறைவடையுமென அவர் தெரிவித்தார்.