சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க, தந்திரியுடன் ஆலோசிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.
சீசனில் வரமுடியாமல் போன பக்தர்களுக்காகவும், வருமான இழப்பை சரிகட்டும் வகையிலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின், மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, ஐந்தில் இருந்து, 10 ஆக அதிகரிப்பது பற்றி பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.