வைகுண்ட துவாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் இன்றி சக்கரதாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் இருந்து பல்லக்கில் 4 மாட வீதிகளில், சக்கரதாழ்வார் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலின் இடப்புறம் உள்ள தெப்பக்குளத்தில் பால்,தயிர், தேன் என பல்வேறு மூலிகைகளால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சக்கரதாழ்வாருக்கு சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.
வழக்கமாக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும். ஆனால் இம்முறை கொரோனா ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தீர்த்தவாரியில் கோயில் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.