திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மூலம் ஒரே நாளில் 4 கோடியே 39 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
கொரோனா ஊரடங்குக்கு முன்பு, கோயிலில் ஒரே நாளில் கோடிகணக்கில் உண்டியல் காணிக்கை கிடைப்பது வழக்கமாகும்.
ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரும், அதன்பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும், காணிக்கை குறைவாகவே கிடைத்து வந்தது.
இந்நிலையில் நேற்று 42,825 பேர் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மேற்கொண்டனர். 8 ஆயிரத்து 340 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தினர்.