மண்டல பூஜையன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் தொடங்கி உள்ளது.
சபரிமலை கோவிலில் மண்டல பூஜையை யொட்டி ஆண்டு தோறும்,ஐயப்பனுக்கு தங்கத்திலான அங்கி அணிவித்து பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் தங்க அங்கி, பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
தங்க அங்கி ஊர்வலம் 25-ந் தேதி மதியம் பம்பை வந்து சேரும். மறுநாள் 26-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் சபரிமலை கோவிலில் நடைபெறும்.