திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து முதல் நாளில் நம்பெருமாள் நீள்முடி கிரீடம் மற்றும் வைர அபயஹஸ்த அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.
இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் நீள் முடி கீரிடம், வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபத்தை சென்றடைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.