திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள பூவராக சுவாமி கோயிலில் பாலாலய மகா சம்ப்ரோட்சணம் விமரிசையாக நடைபெற்றது.
நேற்று காலை ஸ்ரீதேவி -பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் வராக சுவாமி உற்சவமூர்த்தி உள்ளிட்டவர்களை யாககுண்டம் அருகில் எழுந்தருள செய்து அவர்கள் முன் வராக சுவாமிக்கு பிராண பிரதிஷ்டை நடைபெற்றது.
அதற்கு பிறகு மகாபூர்ணாஹுதி நடத்தி பாலாலய மகா சம்ப்ரோட்சணம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவில் வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.