திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கால், 8 மாதங்களுக்கு பிறகு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக நான்கு மாட வீதிகளிலும், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு, சுவாமி வெங்கடாஜலபதி அருள்பாலித்தார். பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி வீதி உலா வந்தபோது, கோலாட்டங்கள் ஆடியும், கோவிந்தா என முழக்கமிட்டும், ஆரத்தி எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.
இனி, முக்கிய நிகழ்வுகளின் போதும் சுவாமி வீதி உலா நடைபெறும் என்றும், அப்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.