மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பம்பை ஆற்றில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோயிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், தினமும் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.